தனியார் வகுப்புக்கு செல்ல மறுத்த பிள்ளையை நடு வீதியில் சங்கிலியால் கட்டி விட்டு சென்ற தாய்…!! – குறித்த சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா….? [photos]

Share this post:

73485
/>73484

பிரத்தியேக வகுப்பு செல்லாத மகளை வீதியில் சங்கிலியில் கட்டிவைத்த சம்பவமொன்று மலேசியாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மலேசியாவிலுள்ள சம்வே பிரதான வீதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி, தினமும் பாடசாலைக்கு சென்று வருகிறாள்.

இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் சிறுமி, பாடசாலை முடிந்து பிரத்தியேக வகுப்பான சைனீஸ் பாடத்துக்கு போகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாய், தனது குழந்தையை வீதியிலுள்ள மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டிவைத்துள்ளார்.

மேலும், பிற்பகல் 3 மணிக்கு கட்டப்பட்ட இந்த சங்கிலி, இரவு 10 மணிக்குத்தான் விடுவிப்பேன் என்று அவர் மிரட்டியுள்ளதாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீதியில் தன்னைக் கடந்து செல்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை விடுவிக்க உதவும்படி கடந்து செல்லும் அனைவரிடம் சிறுமி பரிதாபமாக கேட்டுள்ளதாக வெளியாகியுள்ளன.

Share This:
Loading...

Recent Posts

Loading...