இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமான பதிவு..! – 18 வயதுக்கு குறைவானோர் படிக்க வேணாம்..!

Share this post:

sadasdas

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி புதுவித இடங்கள் என் எல்லாமே பெண்களுக்கு புதிதாக இருக்கும்.

மாமனார். மாமியார், நாத்தனார் என கணவன் வீட்டு உறவுகள் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் எல்லா பெண்களுக்குமே திருமணத்திற்கு முன்பு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

திருமணத்திற்கு முன்னர், பேணிகாத்து வந்த நட்புறவுகளை திருமணத்திற்கு பின்னரும் தொடர முடியுமா? இதற்கு வருங்கால கணவர் ஏதேனும் முட்டுக்கட்டை போடுவாரா என்ற கேள்வி இருக்கும்.

நாம் நினைத்த காரியங்களை செய்ய, கூற முடியுமா? குறைந்தபட்சம் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் கூறிய பிறகு தான் செய்ய முடியும். ஒருவேளை அவர்கள் மறுப்பு கூறினால்? என்ன செய்வது என்ற கேள்விகள் இருக்கும்.

இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றியும் பெண்கள் மத்தியில் ஓர் அச்சம் இருக்கும்.

வேலைகளில் மாற்றம் செய்யவேண்டும். தாய் வீட்டில் இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம், எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். ஆனால், புகுந்த வீட்டில் அப்படி இல்லை. எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டும். காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, தான் வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என நேரம் மற்றும் வேலை மேலாண்மை தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கிறது.

தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொல்வதுண்டு. இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என பொதுவாக அவர்கள் கருதுவது தான்.

வீடு, சேமிப்பு என இப்படி வாழ வேண்டும் என பல கனவுகள் பெண்கள் மத்தியில் இருக்கும். இந்த கனவுகள் எல்லாம் எதிர்காலத்தில் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...