உயிரிழந்த இளைஞனுக்கும் விமலின் மனைவி, மகளுக்கு தொடர்பா..? – மெளனம் கலைத்தார் விமல் வீரவன்ச??

Share this post:

vi

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழந்த இளைஞனுக்கும், வீரவன்சவின் மகளுக்கும் இடையிலான காதல் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முக்கிய சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டது அறிந்ததே..

ஒரு சிலர் இது கொலை எனவும் செய்தி வெளியிட இவ்வலவு காலமும் மெளனமாக இருந்து வந்த விமல் வீரவன்ச தனது மெளனத்தை கலைத்து பேஸ்புக்கில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

லஹிறு என்ற இளைஞனின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என ஆரம்பமாகும் அந்த பதிவில்,

தனது மகனின் நண்பர் என்பதால் அவர் எமது வீட்டுக்கு அடிக்கடி வந்து போகக்கூடிய ஒருவர் , மரணமடைந்த தினமும் அவர் வீட்டுக்கு வந்தபோது, மகனுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்துள்ளனர்.

நான் கொழும்பு சென்றிருந்தேன், நண்பர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அங்கேயே தூங்கி உள்ளான். காலையில் பார்க்கும் போது பேச்சு மூச்சின்றி இருந்ததால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இறந்துள்ளது தெரிய வந்தது.

ஆனால் எனது அரசியல் எதிரிகள் எனக்கு இதனை வைத்து சேறு பூசுகின்றனர். இதனுடன்எ னது மனைவி, மகள் மகனை இணைத்து பேசுகின்றனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனையில் இது இயற்கை மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...