இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 29. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியா பாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

தனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடை வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணப்புழக்கம் உயரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

Share This:
Loading...

Related Posts

Loading...