அவர் இல்லாமல் இல்லாமல் என்னால் இருக்க முடியாது – யாரு அந்த அவரு..!

Share this post:

sda

தமிழ், தெலுங்குத் திரையுலகில் கடந்த சில மாதங்களாக அதிகப்படியாக எழுதப்பட்ட காதல் கிசுகிசு நாகசைதன்யா, சமந்தா ஆகியோரைப் பற்றியதாகத்தான் இருக்கும். இனிமேலும், அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வர வாய்ப்பில்லை. இருவருமே தங்களது காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாகசைதன்யா, சமந்தாவுடனான தன் காதலைப் பற்றிப் பேசிவிட்டார். நேற்று, சமந்தாவும் நாகசைதன்யாக தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசிவிட்டார்.

டிவிட்டரில் ரசிகர்களுடன் நேற்று சாட் செய்தார் சமந்தா. அப்போது ஒரு ரசிகர், “இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இந்த உலகத்தில் உங்களால் வாழ முடியாது என்று சொன்னால் எவற்றைச் சொல்வீர்கள்,” எனக் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, “நாகசைதன்யா, மஸ்காட்டி ஐஸ்க்ரீம், வேலை” என பதிலளித்துள்ளார். அது மட்டுமல்ல ‘பிரேமம்’ படத்தில் நாகசைதன்யாவின் நடிப்பைப் பற்றி அனைவரும் பாராட்டுவது தனக்குப் பெருமையாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

மற்றொரு ரசிகர் ‘ஏன் நாகசைதன்யா, நானாக இருக்கக் கூடாதா ?’ எனக் கேட்க அதற்கு சமந்தா சாமர்த்தியமாக பதிலளித்துள்ளார். “8 வருடங்களுக்கு முன்னால் உங்களைப் பார்க்கவில்லை. உங்களுடன் சிறந்த நட்பை வளர்த்துக் கொள்ள முடியவில்லை,” எனக் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் நாகசைதன்யாவுடன் காதலில் இருந்தாலும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோருடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமந்தா, நாகசைதன்யா திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...