இந்த கிழமைகளில் எந்த சுப நிகழ்ச்சிகளையும் வைக்கக் கூடாது ..! – எந்த நாட்கள் தெரியுமா..? ஏன் தெரியுமா?

Share this post:

ho

சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளவாறு பார்த்தால் ஞாயிற்றுக் கிழமை என்பது சுபதினமல்ல என பெரியோர்கள் சொல்கிறார்கள்.

பழங்காலத்தில் எல்லாம் திருமணம் உள்ளிட்ட முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடந்ததில்லை. இன்றைய காலத்தில் விடுமுறை என்பதற்காக மட்டுமே ஞாயிற்றுக் கிழமைகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நீங்கள் கேட்கலாம், ஏன் ஜோதிடர்கள் அந்த நாளில் சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு குறித்துக் கொடுக்கிறார்கள் என்று. அவர்கள் மனதார மற்றும் சாஸ்திரப்படி குறித்துக் கொடுக்கவில்லை. மக்களின் கட்டாயத்தினால் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள்.

செவ்வாய், சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களிலும் சுபங்கள் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் மிக ஆணித்தரமாக கூறியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை என்பது தின எண்ணிக்கை அடிப்படையிலான குழந்தை குளிப்பாட்டல், புண்ணியாவசனம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியவைகளுக்கு விதிவிலக்காக இருக்கும் ஒரே தினமாகும்.

எனவே, விடுமுறை என்ற அந்த 24 மணி நேரத்திற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டபட வேண்டுமா என்பதை சிந்தித்துக் கொண்டு கிரஹப்பிரவேஸம் மற்றும் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை தவிர்க்கவும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...