சுவிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈழத்தமிழன்…!! இறந்த பின் உடலில் நடந்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம்…

Share this post:

www

சுவிட்சர்லாந்தில் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி கடை அருகே, நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாகி தமிழர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு (25.10) இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

29 வயது மதிக்கத்தக்க அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பபட்ட போதிலும், பின்னர் வைத்தியசாலையில் மறுநாள் மதியம் அவர் மரணமாகி உள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற உடன், சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மாகாண பொலிஸார் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து குறித்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது..

உயிரிழந்த நபர் இலங்கையில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவர் ஆவார்.

இவரது குடும்பம் சுவிஸ் அரசினால் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்விட உரிமை வழங்கப்பட்ட நிலையில் சுவிசில் வசித்து வருகின்றனர்.

உயிரிழந்த கார்த்திக் பாலேந்திரன் இவரின் பெற்றோருக்கு ஒரே ஒரு ஆண் மகன், ஏனையோர் பெண் பிள்ளைகள்.

மேலும் உயிரிழந்த இவரின் உடல் உறுப்புக்களை, இவரது பெற்றோர் சுவிசில் தானம் செய்துள்ளதாக தவல்கள் அறியப்படுகின்றன.

மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படும் யாழ். அச்சுவேலியை சேர்ந்தவரும், சுவிஸின் அதே மாநிலத்தை (சொலத்தூண்) சேர்ந்தவருமான, சந்தேகநபரான “வ…” என்பவர் சம்பவம் நடைபெற்ற மறுநாளே சுவிஸ் போலீசாரிடம் சரணடைந்து உள்ளதாக தெரிய வருகிறது.

இதவேளை மேற்படி துப்பாக்கிசூடு சம்பவத்தின் பின்னணி காரணம், “தொழில் போட்டி” என்றே அறியப்படுகிறது. இதனாலேயே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகி, துப்பாக்கி சூட்டில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

இச்சம்பவம் திட்டமிட்டு, நடைபெறவில்லையெனவும், “ஆத்திரத்திலும், அவசரத்திலும் நடந்ததாக” சுவிஸில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This:
Loading...

Related Posts

Loading...