எனக்கும் சேர்த்து ஒரு குவாட்டர் சொல்லு….. அதிரடியாய் பாருக்குள் நுழைந்த மனைவி – அதிர்ச்சியில் உறைந்த கணவன் – நடந்தது என்ன..?

Share this post:

war

கோவையை அடுத்த கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெயக்குமார் தனது சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால் ஜெயக்குமார் தனது போக்கை மாற்றி கொள்ளவில்லை.

எனவே சரியானன பாடம் புகட்ட முடிவெடுத்தார் லில்லி. அதன்படி கணவர் தினமும் மது அருந்தும் பாரை லில்லி கண்டுபிடித்தார். அப்போது ஜெயக்குமார், கணபதி அத்திபாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வழக்கமாக மது குடிப்ப தெரியவந்தது. அதனை தொடர்ந்து கணவர் மது குடிக்கும் பாருக்கு சென்ற லில்லி அங்கிருந்த நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டார்.

பெண் ஒருவர் மதுபாருக்கு வந்து அமர்ந்திருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லில்லியை வெளியே போகும்படி கூறினர். ஆனால் அவர் என் கணவர் இந்த பாருக்குதான் அடிக்கடி வருவார் நான் அவருடன் சேர்ந்து மது குடிக்க போகிறேன என பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இது தெரியாத ஜெயக்குமார் மது குப்பதற்காக அதே டாஸ்மாக் பாருக்குள் வந்துள்ளார். அங்கே தனது மனைவி லில்லி உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஜெயக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

ஏன் இங்கு வந்தாய் என மனைவியை பார்த்து அவர் கேட்டுள்ளார். அதற்கு லில்லி, எனக்கும் ஒரு குவாட்டர் வாங்கு சேர்ந்து குடிப்போம் என தெரிவித்துள்ளார். உடனே ஜெயக்குமார் வீட்டுக்கு போகலாம் என கூறி மனைவியை அழைக்க, அவரோ மது குடிக்காதே என்று நான் தினமும் சொல்லியும் நீ கேட்கவில்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று இங்கு வந்தேன் என பதில் அளித்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்த நடத்தினர். அப்போது எனது கணவர் குடிப்பதை நிறுத்த வேண்டும். நான் பல முறை சொல்லியும் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற இடத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து இனிமேல் குடிக்க மாட்டேன் என ஜெயக்குமார் உறுதி அளித்தார். உடனே போலீசாரிடம் லில்ல, தனது கணவர் மீண்டும் மது குடித்து விட்டு வந்தால், நான் இங்கு வந்து போராட்டம் நடத்துவேன் என்றார். பின்னர் கணவன், மனைவி ஆகிய இருவரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...