தீபாவளி பண்டிகை நாளான இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 28. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர் கள்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துபிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி

கன்னி: இரவு 8.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச் சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இரவு 8.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர் கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள் . வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.

கும்பம்

கும்பம்: இரவு 8.45 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்பு வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மீனம்

மீனம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இரவு 8.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

Share This:
Loading...

Related Posts

Loading...