சுவிட்சலாந்தில் கொலை செய்யப்பட்ட தமிழனின் கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடங்கள்! – நடந்தது என்ன..?(Video)

Share this post:

swiss

சுவிட்சலாந்து நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதே வேளை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்ட தமிழர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப் படும் என பாதுகாப்புத் தரப்பு குறிப்பிட்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்ட 46 வயது மதிக்கத் தக்க தமிழர் மறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் பொலிசில் சரணடைந்துள்ளதாகவும் சுவிஸ் பிரதான செய்திகள் தெரிவிக்கின்றன….

உயிரிழந்தவர் கனடாவில் வசிதது வந்த தமிழ் பெண்ணை திருமணம் முடித்து குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

கலை ஆர்வம் மிக்க சிறந்த ஆளுமை உள்ள ஒருவராகவும் திகழ்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

உயிரோடிருந்தும் எம்மோடு அவன் பேசாத இறுதி நிமிடங்கள்

Share This:
Loading...

Related Posts

Loading...