மனைவியை அறை ஒன்றினுள் அடைத்து விட்டு வேறு பெண்னுடன் குடும்பம் நடத்திய ஆசாமி..! – பின்னர் நடந்தது என்ன..?

Share this post:

sa

மனைவியை அறையில் போட்டு அடைத்துவிட்டு, இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து குடும்பம் நடத்திய கணவன்! பொலிஸில் முறைப்பாடு. நபர் ஒருவர் தனது சட்டரீதியான மனைவியை அறையில் பூட்டி வைத்து விட்டு வேறு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த கள்ள தொடர்பு குறித்து களுத்துறை நாவுல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சட்டரீதியான மனைவி நாவுல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனது கணவர் நீண்டகாலமாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், வீட்டில் உள்ள வேலைகளை வழமைப் போல் தானே செய்வதாகவும் குறித்த பெண் வீட்டுக்கு வந்த பின்னர், தன்னை அறையில் அடைத்து பூட்டி விடுவதாகவும் மனைவி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக கணவர் செய்து வரும் இந்த நடவடிக்கைகளால் தான் செய்வதறியாத நிலைமையில் இருப்பதாகவும் இதற்கு ஒரு தீர்வை பெற்று தருமாறும் பொலிஸாரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து கணவனையும் மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.தான் வீட்டில் சட்டி பானைகளை கழுவதற்கு மாத்திரமே இருப்பதாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...