பிச்சை எடுக்த் தடை – மீறி எடுத்தால் கைது பொலிஸார் எச்சரிக்கை…!

Share this post:

pi

கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிச்சைக்காரர்களை வைத்து தொழில் புரியும் முதலாளிகள் இருப்பதாக பொலிஸுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் இவர்களுக்கான தடைச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இவ்வாறு பாதையில் அமர்ந்து பிச்சை எடுப்பதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாது, விபத்துக்களும் ஏற்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டே இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...