2 லட்சம் ரூபா கடனை திருப்பிக் கேட்ட நண்பனை வெட்டிக் கொன்ற நண்பன்… – எங்க தெரியுமா..?

Share this post:

ka

நண்பன் ஒருவரினால் இன்னுமொரு நண்பன் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று கேகாலைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கேகாலை, ஹெட்டிமுல்லைப் பிரதேசத்திலுள்ள 29 வயது ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடன் கொடுக்கல் வாங்கல் இக்கொலைக்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு லட்சம் ரூபாவை நண்பனிடமிருந்து கடனாக பெற்ற மற்றுமொரு நண்பனே கடனைத் திருப்பிக் கேட்ட போது கடன் கொடுத்த நண்பனை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...