செத்து விடுவேன் பைக் வாங்கி தா..! தாய் கந்து வட்டிக்கு பைக் வாங்கி கொடுத்தாள்..!? – நடந்தது என்ன..?

Share this post:

byr

சென்னை குமணன் சாவடியில் தனியார் குப்பை அள்ளும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் மல்லி.கணவன் குடித்து குடித்து இறந்து போனான்.

மூன்று பிள்ளைகள். மூத்தவன் விக்கி. அடுத்த இரண்டும் பெண் பிள்ளைகள்.மல்லி மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கித்தான் பிள்ளைகளுக்கு சோறு போடுவாள்.

விக்கி ஒரு தறுதலை… இருபது வயது ஆனதே தவிர எப்போதும் குடி, நண்பர்கள், கூத்து. இதில் ஒரு காதலி வேறு…! காதலி பைக் வாங்குடா ஜாலியா ஊர் சுத்தலாம் என்று அடிக்கடி நச்சரிக்க ஆரம்பித்தாள்.

அம்மாவிடம் போய் விக்கி தகாராறு செய்தான். செத்து விடுவேன் என்று மிரட்டினான். பயந்து போனாள் அந்த ஏழைத் தாய். வேலை பார்க்கும் மேஸ்திரியிடம் கந்து வட்டிக்கு பணம் கேட்டு வாங்கினாள்.

மீதி பணத்துக்கு வேலை செய்யும் பெண்களிடம் கை ஏந்தினாள். புத்தம் புது பைக் வாங்கிக் கொடுத்தாள் மல்லி.

பைக் வாங்கியவுடன் காதலி தேவிக்கு போன் செய்தான் விக்கி. அவள் சந்தோஷமாக போரூர் கம்பெனில இருக்கேன் வாடா என்றாள்.

வீட்டிற்கு கூட போகாமல் பெட்ரோல் போட்டுக் கொண்டு பறந்தான் விக்கி. அம்பத்தூர் மெயின் ரோட்டில் பறந்தான் .

எதிரே புயல் வேகத்தில் வந்த ஒரு டேங்கர் லாரி அடித்து தூக்கியது.மூளை சிதறி துடிதுடித்து அங்கேயே செத்துப் போனான் விக்கி…!

அந்த ஏழைத்தாய் ஓடிவந்து கதறிய கதறல் இருக்கிறதே ..அது கொடுமையிலும் கொடுமை..!

செத்து விடுவேன் என்று மிரட்டி பைக் வாங்கியவன் வாங்கிய அன்றே செத்தான்..! விதி வலிது..!

Share This:
Loading...

Related Posts

Loading...