அந்த நடிகை என்ன ஐட்டமா ? சூப்பர் ஸ்டாரின் பளீர் பேச்சு – யார் அந்த நடிகை..?

Share this post:

i

நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பக்கா மாஸ் படம் என்றால் அதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு ஐட்டம் சாங் ஒன்று இடம்பெறும், இடம்பெற வேண்டும். அது சிங்கம்-புலி யா இருந்தாலும் சரி, இல்ல, பாகுபலியா இருந்தாலும் சாரி. அதுவும் குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முன்னதாக இடம்பெற்று ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும்.

ஆனால் மலையாள படங்களில் குத்துப்பாடல்கள் என்பது அரிது.. அதிலும் ஆக்சன் படங்கள் என்றால் பாடல்களே இல்லாத நிலைதான்.. சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ‘புலி முருகன்’ என்கிற ஆக்சன் படத்தில், கவர்ச்சி நாயகி நமீதா இருந்தும் கூட, ஒரு ஐட்டம் சாங் வைக்காதது ஏன் என அவரிடம் கேட்கப்பட்டது..அதற்கு அவர், “நமீதா இருந்தால் ஐட்டம் பாடல் வைக்கணுமா என்ன..? அவர் அந்த கதைக்கு எந்த அளவுக்கு தேவைப்பட்டாரோ அந்த அளவுக்கு அவரை நன்றாக பயன்படுத்தி உள்ளோம்..

கதைக்கு தேவை என்பதால் தீம் சாங்கையும், கதையோடு இணைந்ததால் மோகன்லால்-கமாலினி முகர்ஜி சம்பந்தப்பட்ட பாடலையும் வைத்தோமே தவிர, அதைக்கூட வலிந்து திணிக்கவில்லை. ‘புலி முருகன்’ போன்ற விறுவிறுப்பான ஆக்சன் படங்களை பார்க்க வரும் ரசிகர்களை கமர்ஷியல் என்கிற போர்வையில் குத்துப்பாடல்களை இணைத்து அவமதிக்க கூடாது.. அது ஆக்சன் படத்துக்கான தர்மமும் அல்ல’ என கூறியுள்ளார் வைஷாக். நம்மவர்கள் கவனிப்பார்களா..?

Share This:
Loading...

Recent Posts

Loading...