திருமணத்தின் போது மணமகன் கொலை..!! மணமகள் உறவினர்களின் வெறியாட்டம்..!! – நடந்தது என்ன..?

Share this post:

kill

தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மணமகன் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அனில் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளார்.

இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களுடைய இந்த முடிவுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மணமகன் உறவினர்களின் துணையுடன் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் வீட்டார் திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு மணமகனை கத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மணமகனின் தந்தையை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில், அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். பிறகு அந்த கும்பல் மணப்பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...