மேக் அப் கலைந்ததால் விவாகரத்தான திருமணம் – நடந்தது என்ன..?

Share this post:

m

மேக் அப் எனப்படும் செயற்கை ஒப்பனை செய்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட மனைவியின் நிஜ முகத்தை பார்க்க பிடிக்காத கணவர், மனைவியை விவகாரத்து செய்தார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயை சேர்ந்த 34 வயதுடைய நபர் 28 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவருடைய மனைவி தன்னை அழகுபடுத்தி கொள்வதற்கு செயற்கை ஒப்பனைகள் அதிகம் செய்து கொள்வார்.

தம்பதிகள் இருவரும் சார்ஜாவில் உள்ள அல் மம்ஜார் கடற்கரைக்கு குளிக்க சென்றனர். கடலில் இருவரும் குளித்தனர்.

கடல் நீரில் குளித்ததால் மனைவி போட்டிருந்த மேக் அப் கலைந்தது. அப்போது மனைவியின் உண்மையான முகத்தை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்தார்.

முன்பு திருமணத்தின் போது இருந்ததை போல் தனது மனைவி அழகாக இல்லை என்று கூறினார். அதிகப்படியான மேக் அப் செய்து தன்னை ஏமாற்றியதற்காக மனைவியை விவாகரத்து செய்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...