ஜெயலலிதா தொடர்பில் மீண்டும் வெளியான பரபரப்புத் தகவல் – கவலையில் மருத்துவர்கள்!

Share this post:

33

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து படுக்கையில் இருப்பதால் அவருக்கு படுக்கை புண் வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்தில், நீண்ட நாட்களாக படுக்கையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புத்துணர்ச்சி ஊட்ட பிசியோ தெரபி சிகிச்சை அளித்தாலும், அவருக்கு ஏற்பட்டுள்ள படுக்கை புண் மருத்துவர்களை கவலையடைய செய்துள்ளது.

இந்த படுக்கை புண்ணை குணப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படுக்கைப் புண் ஏற்படாமல் இருக்க தண்ணீர் பெட், பவுடர் மசாஜ், உடம்பை கூலாக வைத்திருக்கும் ஊசிகள், அடிக்கடி மாற்றி படுக்க வைத்தல் போன்ற முறைகளை கையாள்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பதால் இப்போது ஏற்பட்டுள்ள இந்த படுக்கைப் புண்களை போக்க அதிநவீன ஸ்ப்ரே செய்யும் மருந்துகள் மூலம் மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...