இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! – அதிகமாகப் பகிருங்கள்…!

Share this post:

ssss

நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டிருந்த மின் வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வரவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் கருவிகள் செயலிழந்து போயிருந்தன.

இதன் காரணமாக, தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும் குழாய் உள்ளிட்ட முக்கிய உற்பத்தித் தொகுதி பழுதடைந்திருந்தன.

தற்போது சீர்செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினால் நடைமுறையிலிருந்த மின்வெட்டு இன்று இரவு முதல் நிறைவுக்கு வர உள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 1 தொடக்கம் 13 தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளில் நாளாந்தம் ஒன்றரை மணித்தியால மின் வெட்டு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...