மர்ம உறுப்பில் பெற்றோல் ஊசி போட்ட கொடூரம் – பதறவைத்துள்ள சம்பவம்.. ஏன் தெரியுமா..?

Share this post:

ssadsad

இந்தியா, உத்தரபிரேதசத்தில் கையடக்க தொலைபேசியை திருடியதாக கூறி மூன்று சகோதரர்களுக்கு மர்ம உறுப்பில் ஊசி போட்டுள்ளனர்.

ஊசியில் பெற்றோலை நிரப்பி போட்டதால் அவர்களின் மர்ம உறுப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

அந்த மாநிலத்தின் பிரபல கட்சி ஒன்றின் உறுப்பினரது சகோதரரின் வீட்டில் கையடக்க தொலைபேசி ஒன்று திருட்டு போய் உள்ளது.

இது குறித்து 16, 17, 24 வயதுடைய சகோதரர்கள் மீது கையடக்க தொலைபேசி திருடியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அந்த கட்சி உறுப்பினரது சகோதரர், தனது நண்பர்களுடன் சென்று அந்த 3 பேரையும் அடித்து உதைத்துள்ளார்.

ஆனால் தாங்கள் கையடக்க தொலைபேசியை திருடவில்லை எனஅவர்கள் கூறியும் விடாமல் அவர்களை தாக்கியுள்ளார்.

பின்னர் ஊசியில் பெற்றோலை நிரப்பி மூன்று பேரின் மர்ம உறுப்பில் போட்டுள்ளர். இதனால் பாதிக்கப்பட்ட 16, 17 வயது சிறுவர்கள் டெல்லி மருத்துவமனையிலும், 24 வயது வாலிபர் லோனி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் மர்ம உறுப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இதுனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...