மனைவியை கழிவறைக்குள் மறைத்து வைத்த பிரபல கிரிக்கெட் வீரர் – யார் தெரியுமா..? ஏன் தெரியுமா..?

Share this post:

maaa

கிரிக்கெட் உலகில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமே இது…

1999ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது மனைவிகளை உடன் அழைத்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியதால் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது. எனவே அணி நிர்வாகம் வீரர்கள் தங்களது மனைவிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி உடனே அனைத்து வீரர்களும் தங்களது மனைவிகளை திருப்பி அனுப்பி விட்டனர்.

ஆனால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷக்லின் முஷ்தாக் மட்டும் தனது மனைவி சனாவை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பாமல் தனது அறைக்குள்ளேயே ஒளித்து வைத்து இருந்தார்.

மேலும் அணியின் முகாமையாளரோ அல்லது பயிற்சியாளரோ திடீரென அறைக்கு வந்தால், அலுமாரி அல்லது கழிவறைக்குள் ஒளிந்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார். இந்த விஷயம் மற்ற வீரர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் அதனை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

Share This:
Loading...

Related Posts

Loading...