அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி!

Share this post:

paal

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப் பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்லஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தவர் கலிங்கே ரத்னே என்கிற 57வது பட்டாலியன் அதிகாரி.

இரக்க சுபாவம் உள்ளவர். குறிப்பாக தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பை வைத்திருப்பவர். அவருக்கு பாலச்சந்திறனைப் பார்த்ததும் வியப்பு.

மாபெரும் இயக்கத்தின் தலைவரின் மகனா இவர் என்று. உடனடியாக பிஸ்கட், தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். அந்த பாலகனை கொலை செய்யப்போகிறோம் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..!

ராணுவத்தலைமைக்கு செய்தி போய்ச்சேர, முக்கிய அதிகாரிகளும் அவர்களுடன் துரோகி கருணாவும் உடன் வந்திருக்கிறார்..! அந்த பாலகனை என்ன செய்வது என்று ஆலோசனைகள் நடந்திருக்கிறது.

அப்போது கருணா இவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன்…!!அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறிஇருக்கிறார்.

கலிங்கேரத்னே கலங்கிப் போயுள்ளார். அதன் பின் மூன்று வீரர்கள், சுற்றி நின்று அந்த இளம் பாலகனை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.! இவ்வாறு தனது வலைத்தளத்தில் கூறி கலங்கியுள்ளார் அந்த மனிதம் நிறைந்த அதிகாரி..!

Share This:
Loading...

Related Posts

Loading...