பிரபல நடிகை மரணம் திட்டமிட்ட படுகொலையா? அம்பலமாகும் உண்மைகள்…!

Share this post:

aaa

அண்மையில் நுகேகொட – ஜுப்லிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பிரபல நடிகை கவீஷா அயேஷானி பரிதாபமாக உயிரழந்தார்.

குறித்த விபத்து தொடர்பில் பல்வேரு வகையான மாறுபட்ட கருத்துகள் வெளிவந்த நிலையில் தற்போது கவீஷா ஓட்டிச்சென்ற கார் விபத்து ஏற்பட்ட விதம் தொடர்பில் சீசீடிவி (cctv) கானொளி தற்போது வெளியாகியுள்ளது.

அவர் சென்ற கார் நேராக பயணித்து பின்னர் தீடீரென திரும்பி வழுக்கியவாறு வீதியை விட்டு விலகிச் சென்று அடுத்த பக்கம் திரும்பி வேறு ஒருவாகனத்துடன் மோதுகின்றது.

நேராக சென்ற வாகனம் திடீரென அடுத்த பக்கம் (U திசையில்) திரும்ப வேண்டிய அவசியம் இல்லை என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த காணொளியின் அடிப்படையில் பார்க்கும் போது விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மரணமடைந்த நடிகையின் தந்தை நடிகை குறித்து தெரிவிக்கும் போது,

கவீஷா 5 வருடங்களுக்கு முன்னர் மோட்டார் வாகன அனுமதி பத்திரம் பெற்றுக் கொண்டார்.எனக்கு தெரிந்த அளவில் கவீஷாவுக்கு போதைப்பொருள் அல்லது மதுபழக்கங்கள் இல்லை. அவருக்கு எவ்வித தூக்கமின்மை பிரச்சினைகளும் காணப்படவில்லை. ஆரோக்கிய நிலையிலேயே இருந்தார் என்றே நடிகையின் தந்தை தெரிவித்திருந்தார்.

ஆனாலும் குறித்த காணொளி அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனும் இது குறித்து வேகமான விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பில் உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் எனவும் குறித்த காணொளி முக்கிய ஆதாரமாக திகழும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...