வாகன விபத்தில் பிரபல நடிகை பலி – யார் அந்த நடிகை..? (Photos)

Share this post:

na

பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நுகேகொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுள்ள செல்லப்பட்டுள்ளதாக மீரிஹான போக்குவரத்து பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கவீஷா அயேஷானி மோட்டார் வாகனம் ஓட்டிச் சென்றுள்ளதாகவும், அது அவருக்கு சொந்தமான மோட்டார் வாகனம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட நடிகையாக இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும்.

அண்மையில் இவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், பிறந்த நாள் விழாவில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

23

Share This:
Loading...

Related Posts

Loading...