எதிர் வீட்டு பெண் குளிப்பதை வீடியோ எடுத்து உல்லாசத்துக்கு அழைத்த நபர் மனைவியுடன் கைது!

Share this post:

p

தமிழகத்தி ஆரணியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது எதிர் வீட்டை சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் அங்கு வந்து அப்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து அப்பெண்னை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். மேலும், உல்லாசத்துக்கு வராவிட்டால் குளியல் வீடியோவை பலருக்கும் காட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது தொடர்பாக களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

முனியாண்டிக்கு உடந்தையாக செயல் பட்டதாக அவரது மனைவி உமாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...