இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 16. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

கணவன் & மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். நண்பகல் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள்.அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மிதுனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்

கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

சிம்மம்

நண்பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கன்னி

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். நண்பகல் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

துலாம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

தனுசு

எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மகரம்

திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்க் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்

நண்பகல் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகளை முறியடித்து முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Share This:
Loading...

Related Posts

Loading...