பாடசாலை செல்லும் போது மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட கொடூரம்!!

Share this post:

sadfsa

ஹப்புத்தளை – கஹகல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர், அந்த முச்சக்கரவண்டியில் இருந்து குதித்து தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்து உரிய நேரத்துக்கு வராத காரணத்தினால், அவரது தாயாரால் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு ஹப்புத்தளை நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், ஹப்புத்தளை நகரில் அவர் இறங்கவேண்டிய இடம் வந்தும் முச்சக்கரவண்டி நிறுத்தப்படாமல் பயணித்துள்ளது.

இதனை அடுத்து குறித்த மாணவி முச்சக்கர வண்டியில் இருந்து குதித்துள்ளார்.

இது குறித்து ஹப்புத்தளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...