கீர்த்தி சுரேஷை நெளிய வைத்த காமெடியன் சதீஷ்..! – என்ன செய்தார் தெரியுமா..?

Share this post:

keer

கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தில் காமெடியனாக நடித்த சதீஷ், விஜய்யு டன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பைரவா படத்திலும் நடிக்கிறார். அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ், சதீஷ் மாலை அணிந்தபடி பைரவா படத்தின் பூஜையின் நின்றபோது எடுத்த புகைப்படங்களை வைத்து அவர்களது திருமண கிசுகிசு ஒன்று வேகமாக பரவியது. பின்னர் அதற்கு மறுப்பு வெளியிட்டனர்.

கீர்த்திசுரேஷ்தரப்பினரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காமெடியனுடன் கிசுகிசு செய்தி வெளியானதால் அதை காமெடியாகவே எடுத்துக்கொண்டனர்.

ஆனால், இந்த விசயத்தை விடுவதாக இல்லை சதீஷ். ரெமோ படத்தின் நன்றி விழாவிலும் அந்த கிசுகிசு விசயத்தை மீண்டும் கிளறி விட்டார் . அப்போது, என்னையும், கீர்த்தி சுரேசையும் பற்றி திருமண கிசுகிசு வெளியானது பற்றி எனது அம்மா என்னிடம் கேட்டார். அப்போது அவங்க மேனகாவோட பொண்ணும்மா. இதெல்லாம் சும்மா என்றேன். அதைக்கேட்டு சந்தோசப்பட்ட அவர்களின் முகம் சோகமாக மாறியது.

மேலும், பைரவா படப்பிடிப்பை முடித்து விட்டுதான் நானும், கீர்த்தியும் இந்த விழாவுக்கு கிளம்பி வந்தோம். ஆனால் வந்து பார்த்தபோது ஒரே ஆச்சர்யம். நான் அணிந்து வந்திருந்த கறுப்பு கலரிலேயே கீர்த்தியும் டிரஸ் அணிந்து வந்திருந்தார். அந்த அளவுக்கு எங்களுக்கிடையே ஏதோ ஒரு வகையில் ஒரு ஒற்றுமை இருந்து வருகிறது என்று சொல்லி, மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷை சற்றே நெளிய வைத்தார் சதீஷ்.

Share This:
Loading...

Recent Posts

Loading...