திருட வந்தவனுக்கு பெண்ணை கட்டிக்கொடுத்து மாப்பிள்ளையாக்கி தனது சொத்துக்களையும் கொடுத்த கோடீஸ்வரன் ..!! ஏன் தெரியுமா..?

Share this post:

thii

காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ராஜ்கோட்டி. மனைவி இல்லை ஒரே மகள். நிலம் புலம் வீடு வாசல் என்று பெரும் பணக்காரர் சொல்லிக் கொள்ள சொந்த பந்தம் என்று பெரிதாக யாரும் இல்லை. இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து கவனிப்பதில்லை.

மகளை முடிந்த அளவு படிக்க வைத்தார். படிப்பு ஏறவில்லை என்றதும் நிலம், மாடுகளை கவனித்து கொண்டு கூடவே இருக்க சொல்லி விட்டார்..! அன்று இரவு மழை. நடுஇரவு திருடுவதற்காக வந்தான் ஜாபர். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி ராஜ்கோட்டி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருக்க மகளும் வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

திருட வந்த ஜாபருக்கு அதிர்ச்சி. ஓடிப்போய் லைட்டை தேடி பிடித்து அவருக்கு தண்ணீர் கொடுத்து நெஞ்சை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். யாரும் இல்லையா என்று கத்த சத்தம் கேட்டு மகள் ஓடிவந்தாள்.

அக்கம் பக்க்கத்தில் உள்ளவர்களை எழுப்பி கார் வரவைத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போனார்கள்.ஜாபரும் கூடவே சென்றான். அப்பாவை காப்பாற்றினார்கள்.

அதன் பின்தான் ஜாபர் யார் என்று கேட்டாள் மகள். அவன் உண்மையில் தான்திருடன் என்றும் அநாதை என்றும் கூற அப்பா மகள் இருவருக்குமே ஜாபரை பிடித்து விட்டது.அதன் பின் மூன்று நாட்கள் அந்த தகப்பனை ஜாபர் கவனித்துக் கொண்டான்.

மகள் சமைத்து எடுத்து வருவாள்.இரவு அப்பா கூடவே ஜாபரும் தங்கினான். அப்பா நலமாகி வீடு திரும்ப ஜாபர் விடை பெற்றான். ஆனால் அப்பாவோ மகளோ அவனை போகவேண்டாம் தங்களோடு இருந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஜாபரும் அந்த குடும்பத்தில் ஒருவராக மாறினான். பின்னர் ஜாபருக்கு தன் மகளை திருமணம்செய்து வைத்தார் தந்தை. நேர்மையாக உழைத்து பல கோடிகளுக்கு அதிபதி ஆனான், அந்த திருட்டு மாப்பிள்ளை.

ஜாபரின் சொத்து மதிப்பு இன்று பல கோடிகள்.

விசுவாசம் அவனை உயர்த்தியது..!

Share This:
Loading...

Related Posts

Loading...