காதலியை வீடு புகுந்து கடத்திச் சென்ற காதலன் – ஏன் தெரியுமா..?

Share this post:

ss

காதலியின் வீட்டுக்கு சென்று அவரது தாயை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் மிஹிந்தலையில் நடந்துள்ளது.

இதையடுத்து திவியாபெந்தவெவ காட்டில் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை மறைத்து வைத்திருந்த காதலன் மற்றும் அவரது நண்பனை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட 17 வயதான யுவதியின் தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 4 இளைஞர்களுடன் யுவதியின் வீட்டுக்குச் சென்ற பிரதான சந்தேகநபர் யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரும் யுவதியும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் தொடர்பை யுவதியின் பெற்றோர் விரும்பாத காரணத்தினால், யுவதி காதலை இடையில் நிறுத்திக்கொள்வோம் என யுவதி சந்தேகநபரிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சந்தேகநபரான காதலன் சில முறை யுவதியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக யோசனை முன்வைத்துள்ளார்.

இதனை காதலி விரும்பவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.30 அளவில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு யுவதியின் வீட்டின் முன் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, காதலியின் தாயின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய போவதாக மிரட்டி, அறையில் தூங்கிக்கொண்டிருந்த காதலியை இரவு அணியும் ஆடையுடன் அப்படியே கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியை கட்டுப் பகுதிக்கு கடத்திச் செல்லும் போது சந்தேக நபர் அவரது கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். கத்தி, கழுத்தில் பட்டு யுவதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் யுவதியை பலவந்தமhக தரையில் இழுத்துச் சென்றதால், யுவதியின் வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சந்தேகநபர் யுவதிக்கு பாலியல் ரீதியான எந்த தொந்தரவையும் கொடுக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...