வீதியில் 3 மாணவிகள் பரிதாமகாப் பலி… நடந்தது என்ன??? (Photos)

Share this post:

3 மாணவிகளை பலி கொண்ட கிண்டி விபத்தில் வேகமாக வந்த தண்ணீர் லாரி டிரைவர் போதையில் இருந்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று மதியம் 1 மணி அளவில் தண்ணீர் லாரி முழுதும் தண்ணீர் ஏற்றிக்கொண்டு ஒன்று கிண்டி கத்திப்பாரா பாலத்திலிருந்து சைதாப்பேட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. கிண்டி ரயில்வே மேம்பாலத்தில் ஏறி ஹால்டா நோக்கி வந்த லாரி பாலத்தை விட்டு இறங்கி சிறிது தூரம் வரும் போதே ஆட்டோ ஒன்றின் மீது லாரி வேகமாக மோதியது.

மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்படியும் நிற்காமல் லாரி ஒரமாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவிகள் மீதும் மோதியது. இதில் மூன்று மாணவிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . சிறிது நேரத்தில் ஜிஎஸ்டி சாலையே போர்க்களம் மாதிரி ஆகிப்போனது. சாலையில் கிடக்கும் மாணவிகளின் உடல் மற்றும் காயமடைந்தவர்களின் ஓலம் என அந்த இடமே பரபரப்பாகி போனது.

சாலைகளில் வாகனம் ஓட்டியவர்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய ஓடி வந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஓமன குட்டன் என்பபவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் மீட்டு ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாணவிகள் மூவரும் அருகில் உள்ள வேலம்மாள் கல்லூரியில் மாலை வகுப்பில் படித்துவந்த மாணவிகள் இரண்டு பேர் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஒருவர் முதலாமாண்டு மாணவி.

ரயில் நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி பலியானார்கள். பலியான மாணவிகள் விபரம் 1. சித்ரா(20) பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திருவொற்றியூரை சேர்ந்தவர். 2. காயத்ரி(20) பிசிஏ இரண்டாம் ஆண்டு மாணவி போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர். 3. ஆயிஷா(18) பிஏ முதலாமாண்டு மாணவி புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.

தப்பி ஓடிய லாரி டிஒரைவர் லாரியை ஒரு இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு சென்று விட்டார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வேலம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில் இந்த இடத்தில் இதே போன்று இதற்கு முன்னரும் விபத்து நடந்துள்ளது .

இந்த பகுதி ஒரே புறம் நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளதால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

லாரியை ஓட்டிய டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றுவிட்டார்.

இதற்கிடையே லாரி ஓட்டுனர் ராஜேந்திரனை (42) போலீசார் கைது செய்தனர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் மெட்ரோ வாட்டர் காண்ட்ராக்டில் வேலை பார்த்து வந்தார்.

pali

pali2

3

Share This:
Loading...

Related Posts

Loading...