இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 14. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

கடகம்

காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை வந்துப் போகும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

சிம்மம்

காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

கன்னி

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்

பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்

காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

மீனம்

காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Share This:
Loading...

Related Posts

Loading...