இலங்கை வாழ் மக்களுக்கு ஒரு இனிமையான செய்தி – என்ன என்று தெரியனுமா…? கண்டிப்பா பாருங்க…!

Share this post:

capture

ஐக்­கிய நாடு­களின் சிறப்பு முக­வ­ராண்மை நிறு­வ­ன­மாக செயற்­படும் சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து தாபனம் 1944 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. 191 உறுப்பு நாடு­களைக் கொண்ட இவ்­வ­மைப்பில் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கை அங்­கத்­துவம் வகிக்­கின்­றது…

இலங்­கைக்கும் கன­டா­விற்­கு­மி­டையில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து தொடர்­பாக புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொள்ள தீர்­மானம் எட்­டப்­பட்­ட­தா­கவும் அதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நிறை­வு­பெற்­றுள்­ள­தா­கவும் இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் அஹமட் ஏ. ஜவாட் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச சிவில் விமானப் போக்­கு­வ­ரத்தின் 39 ஆவது மாநாட்டு அமர்வு கன­டாவின் மொன்­றியல் நகரில் நடை­பெற்று வரு­கின்­றது. குறித்த மாநாட்­டி­லேயே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் சிறப்பு முக­வ­ராண்மை நிறு­வ­ன­மாக செயற்­படும் சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து தாபனம் 1944 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. 191 உறுப்பு நாடு­களைக் கொண்ட இவ்­வ­மைப்பில் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கை அங்­கத்­துவம் வகிக்­கின்­றது.

இம்­மா­நாட்டில் கலந்து கொண்ட இலங்கைப் பிர­தி­நி­திகள் முக­வர்­க­ளிடம் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டனர். இதன்­போது விமானப் போக்­கு­வ­ரத்து தொடர்­பான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைக்­கான தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது.

இதன்­மூலம் விமானப் போக்­கு­வ­ரத்து மற்றும் சிக்­காகோ உடன்­ப­டிக்கை மூலம் ஏற்­ப­ட­வுள்ள இலங்­கைக்­கான எதிர்­கால சவால்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் இம்­மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை மொன்­றியல் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச சுற்­று­லாத்­துறை தொடர்­பான விசேட நிகழ்­விலும் இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த வரு­டத்தில் மாத்­திரம் கன­டா­விலி­ருந்து 37732 பேர் உல்லாசப்பிரயாணிகளாக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இம்மாநாட்டின் மூலம் பல தீர்க்க மான முடிவுகள் எட்டப்படும் என எதிர்ப் பார்க்கப்படுகின்றது.

Share This:
Loading...

Recent Posts

Loading...