தாய்லாந்தை சேர்ந்த ஆண் பாலியல் தொழிலாளிகள் இலங்கையில் கைது!

Share this post:

arre

தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள ஆண் பாலியல் தொழிலாளர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்கள் சத்திர சிகிச்சை மூலம் பாலியல் மாற்று செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த ஆண் பாலியல் தொழிலாளர்களை ஈடுபடுத்தி மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் என்ற பெயரில் இவர்களை அனுப்பி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது பெருமளவில் கொழும்பை அண்டிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தொலைபேசி ஊடாக தரகர்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் இவர்களை பெற்றுக்கொள்வதாக மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...