காதலை முறித்துக்கொள்ள முயன்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

Share this post:

lo

திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணொருவரைக் கடத்திச் சென்ற அவரது காதலன் மற்றும் அவரின் நண்பரை மிஹிந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

17 வயதான பெண்ணொருவரே தனது 18 வயது காதலனால் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காதல் தொடர்பை நிறுத்திக்கொள்ள முடிவுசெய்த வேளையிலேயே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.

முகத்தை துணியால் மறைத்து காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ள காதலன் மற்றும் அவரது நண்பன் , பெண்ணின் தாயின் கழுத்தில் கத்தியை வைத்தே கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் பெண்ணின் தாய் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது முகத்தில் இருந்த துணி விலகியுள்ளது. இதனை அடுத்து வந்தது யார் என தாய் அறிந்துகொண்டுள்ளார்.

பெண்ணைக் கடத்தியவர்கள் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வனப்பகுதியில் அவரை தடுத்து வைத்திருந்துள்ளனர்.

பின்னர் அவர் அளித்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அவர்களை மீட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...