இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 13. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

சிம்மம்

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

துலாம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

விருச்சிகம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

தனுசு

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

மகரம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கும்பம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்

மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

Share This:
Loading...

Related Posts

Loading...