காதல் வலையில் மாணவியை வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர்: ஏமாற்றத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Share this post:

dsad

தமிழகத்தின் தக்கலை அருகே பள்ளி மாணவி ஒருவர் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலையை அடுத்த கீழ மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரதாஸ். இவரது மகள் ஜெனிபர் (17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய ஜெனிபர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் ஜெனிபரை தேடினர்.

அப்போது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மருந்துகோட்டை மலை பகுதியில் ஜெனிபர் பிணமாக கிடந்தார்.

ஜெனிபர் சுமார் 90 அடி ஆழ பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், ஜெனிபர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ஜெனிபர், தனிஷ் என்பவர் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மகளிர் பொலிசில் ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தனிஷ்சை அதிரடியாக கைது செய்த பொலிசார், மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களையும் தேடி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...