ஜெயலலிதாவின் அதிகாரங்கள் பறிப்பு – தமிழகத்துக்கு புதிய முதல் அறிவிப்பு – தமிழக ஆளுநர் அதிரடி..! – யார் புதிய முதல்வர் தெரியுமா..?

Share this post:

tn

தமிழக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக ஆளுநர் இந்த அறிவிப்பை விடுத்தள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட அறிவிப்பில், ”முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக செயற்படுவார். எனத் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...