பிரபல நாயகிகளின் பொழுதுபோக்கு என்னென்ன தெரியுமா?

Share this post:

na

சினிமாவிற்காக தங்கள் விருப்பங்களை எல்லாம் விட்டுவிட்டு நடிக்கும் பிரபலங்கள் பலர். ஆனால் அவர்களுக்கு உண்மையில் என்ன பிடிக்கும், அவர்களின் பொழுதுபோக்கு விஷயங்கள் என்ன என்பது பலருக்கு தெரியாது. அதன்படி பிரபல நாயகிகளின் பொழுதுபோக்கு விஷயங்களை தற்போது பார்ப்போம்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

இவருக்கு குடும்பத்துடன் நேரம் செலவழிக்க மிகவும் பிடிக்குமாம், அதிலும் அவருடைய குழந்தையுடன் இருப்பது பிடிக்குமாம். குடும்பத்துடன் இல்லாத போது பாடல் கேட்க பிடிக்குமாம்.

அசின்

ரஜினியின் ரசிகையான இவருக்கு வெளியில் பார்ட்டிகளுக்கு (Party) செல்ல ஆசையாம். அப்படி இல்லையென்றால் நீண்ட தூரம் கார் ஓட்டுவாராம்.

ஹன்சிகா

படப்பிடிப்பு முடித்துவிட்டால், தனக்கு தோன்றிய நடனத்தை ஆடி நேரம் கழிப்பாராம், பாடல் கேட்பார் அல்லது நல்லா உணவுகள் (Junk Food) சாப்பிடுவாராம்.

சமந்தா

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை இவர். எவ்வளவு தான் பிரபலம் ஆனாலும் தன்னுடைய நண்பர்களை மறக்காதவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் இருப்பாராம். இதுதவிர தனியாக காரில் செல்ல விருப்பமாம்.

ஸ்ரேயா சரண்

இவரும் எல்லா நாயகிகள் போல நேரம் கிடைக்கும் போது பாடல்கள் கேட்பாராம், இல்லையெனில் Long Drive போவாராம்.

ஸ்ருதிஹாசன்

வேலை இல்லா நேரத்திலும் பிஸியாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்பி எடுப்பது, புத்தகங்கள் படிக்க பிடிக்குமாம். இல்லையெனில் நண்கர்களுடன் வெளியில் சுற்றுவது, வெளியூர்கள் செல்வது என்று இருப்பார்.

தமன்னா

நண்பர்களுடன் வெளிநாடுகள் சுற்றுவது மிகவும் பிடிக்குமாம், அதிலும் இவருக்கு மிகவும் பிடித்த இடம் காஷ்மீர் தானாம். அதோடு இவருக்கு நடனம் ஆட ரொம்ப பிடிக்குமாம்.

திரிஷா

புத்தகங்கள் படிப்பது, பாட்டு கேட்பது தான் இவருடைய பொழுதுபோக்காம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...