பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நடந்தது என்ன…?

Share this post:

ko

தமிழ் நாட்டின் பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி யாஸ்மின் (20). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. சுலைமான் ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சுலைமான் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இதனால் வீட்டில் யாஸ்மின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து தெருவில் உள்ள யாமீன் தாய் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது படுக்கையறையில் அலங்கோலமான நிலையில் யாஸ்மின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்ததை கண்டு யாமீனின் தாய் அதிர்சசி அடைந்து கதறி அழுதார். அவர் அணிந்திருந்த தாலி, மோதிரம் வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல்போய் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக பண்ருட்டி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பண்ருட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகை காணவில்லை என தெரிய வந்தது. நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே போலீசில் சரணடைந்த யாஸ்மீனின் தாய் மாமன் மகன் அனீபா அளித்த வாக்குமூலத்தில், புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன். தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். எனக்கும் ஜாஸ்மீனுக்கும் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் என்னுடைய பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ஒரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன்.

சமீபத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து ஜாஸ்மீன் வீட்டிற்கு சென்றேன். எப்போதும் வீடு பூட்டிக்கும் என்பதால் குடிக்க தண்ணீர் கேட்டேன். உறவினர் என்பதால் கதவை திறந்து தண்ணீர் கொடுத்தார். அப்போது பேஸ்புக்கில் ஏன் சாட்டிங் செய்கிறார் என்றேன். நான் என்ன செஞ்சாலும் உனக்கு என்ன என்றார். உடனே கோபமடைந்த நான் மிளகாய் பொடியை தூவி வாயில் துணியை வைத்து அழுத்தி கத்தியால் குத்தி கொலை செய்தேன் என அனீபா போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...