காதலியின் திருட்டு காதலை பிடிக்க முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து சென்ற காதலனுக்கு நடந்த சோகம்..!

Share this post:

pir

கண்கள் மாத்திரம் தெரியும் வகையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து கம்பஹா ரயில் நிலையத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரை அங்கிருந்தவர்களும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த நபரின் கண் புருவங்கள் பெரிதாக இருப்பதை அவதானித்த ஒருவர் அந்த நபர் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பொதுமக்கள் இணைந்து சந்தேக நபரை பிடித்து கம்பஹா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தான் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது பிட்டகோட்டே பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் வெயங்கொடையில் வசிக்கும் தனது காதலி வேறு ஒருவருடன் கொண்டிருக்கும் திருட்டு காதலை கண்டுபிடிக்க தான் இவ்வாறு மாறு வேடத்தில் வந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் புர்காவை கொடுத்து சந்தேக நபரை விடுவித்துள்ளதாக தெரியவருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...