காலில் விழுந்து கதறினேன் ஆனால்…பெண் ஒருவருக்கு நடந்த சோகம்..!

Share this post:

ra

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான பெண் ஒருவர் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.

இதன் போது அவரை தொடர்பு கொண்ட 18 வயதேயான இளைஞன் ஒருவன் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அவர் ஒத்துழைக்க மறுக்கவே அவரது முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர. மேலும் ஒத்துழைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என அந்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவனிடம் அந்த பெண்மணி கதறியுள்ளார். எனினும், அந்த பெண்ணை தொடர்ந்தும் அந்த இளைஞன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண் குறித்த இளைஞரிடம் கெஞ்சியுள்ளார். எனினும், அந்த இளைஞனர் பெண்ணைவிட்டு வைக்கவில்லை.

அந்த பெண் தனது முகத்தில் உள்ள ரத்தத்தை அவன் சட்டையில் துடைத்துள்ளார். இதுவே சந்தேகநபரை எளிதில் பிடிக்க எங்களுக்கு உதவியுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அந்த இளைஞனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...