பிரான்ஸ் தமிழ் பெண்ணை யாழில் ஏமாற்றிய மன்மதன் சிக்கினார்?

Share this post:

pe

மெற்றிமோனி என்று சொல்லி எனக்கு 24 வயது என்னை யாரவது திருமணம் முடிக்க விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள் என்று சற்றும் கூசாமல் விளம்பரங்களை போடுகிறார்கள் சில தமிழ் பெண்கள்.

இதில்வேறு எனக்கு பிரான்ஸ் பாஸ்போட், லண்டன் பாஸ்போட் என்று ஆசைவார்த்தைகள் வேறு. இவ்வாறு சமீபத்தில் பிரான்சில் உள்ள பெண் ஒருவர் கொடுத்த , விளம்பரத்தை பார்த்த யாழ் மன்மதன் ஒருவர், அப்பெண்ணோடு தொடர்புகொண்டு முதலில் அவரது ஜாதகத்தை வாங்கி. அதற்க்கு 80 சதவிகிதம் பொருந்தும் வகையில் தனது ஜாதனகத்தை திருத்தி எழுதி அனுப்பியுள்ளார். இதனை பார்த்த குறித்தபெண் இவரோடு தொடர்புகொண்டு பேசி வர.

பேச்சு நாளடைவில் வளர்ந்து காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து அவர் யாழ் வந்த நிலையில். பதிவாளர் ஒருவரை வைத்து போலியான ரெஜிஸ்டர் கல்யாணம் ஒன்றை இந்த மன்மதன் நடத்தியுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் நாளை ஒரு பிரச்சனை என்று வந்தால் எந்த தடையங்களும் இருக்க கூடாது என்பது இவரின் முன்னெச்சரிக்கையாக இருந்துள்ளது. பின்னர் பிரான்ஸ் சென்ற பெண்ணிடம் இருந்து பிரான்ஸ் வரவேண்டும்.

அதற்கு முன்னதாக சில கடன்கள் இருக்கிறது அதனை அடைக்கவேண்டும். ஆனால் வீட்டை விற்றால் 80 லடசம் வரும். இப்ப விற்க்கவேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறி. பெண்ணிடம் இருந்து சிறுகச் சிறுக 40 லட்சத்தை கறந்துவிட்டார்.

திடீரென கம்பி நீட்டிய இவர் செயலை, அப்பெண் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. பிரான்சில் இருந்து காசு அனுப்பும் வேளை ஆ.ஐ,ஏ என்னும் முகவர் ஊடாக அவர் காசை அனுப்பி இருந்தார்.

அப்போது எந்த பெயருக்கு காசை அனுப்பினாரோ அந்த பெயரில் உள்ள நபர் மீது யாழ் பொலிசாரிடம் அப்பெண் முறைப்பாடு செய்ய. பொலிசார் சென்று அவரை முதலில் கைதுசெய்துள்ளார்கள். பின்னர் தான் அந்த மன்மதன் தான் இவர் என்பதும். கல்யாணம் கட்டி பெயர் வேறு.

அவரது உண்மையான பெயர் வேறு என்று மணமகளுக் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. போதாக்குறைக்கு பதிவுத் திருமணம் கூட போலி என்பதும் அதனை பதிந்து கொடுத்த நபரும் டுபாக்கூர் எம்பதும் தெரியவர பொலிசார் இருவரையும் கைதுசெய்து தற்போது விசாரித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...