இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 11. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ரிஷபம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

கடகம்

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கன்னி

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை வளர்ப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

துலாம்

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

விருச்சிகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

தனுசு

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

மகரம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

கும்பம்

குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

மீனம்

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

Share This:
Loading...

Related Posts

Loading...