பூஜை என்று கூறி பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்..!

Share this post:

dsdsa

இந்தியாவில் திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளியின் மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் தங்களது மகளை வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை.

இதனால் அவர்கள் தங்களது மகளின் நோயை குணப்படுத்த மாந்திரீக பூஜை செய்பவரின் உதவியை நாட முடிவு செய்தனர். அப்போது திருவனந்தபுரம் அருகே ஒழுகுபாறையை சேர்ந்த சுனில் (வயது 32). என்பவர் அவர்களுக்கு அறிமுகமானார்.

அவர் தன்னை மாந்திரீக பூஜை செய்யும் பூசாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த மாணவியை தனது பூஜை மூலம் குணப்படுத்த முடியும் என்று குறித்த மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சை நம்பிய அவர்கள் சுனிலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினார்கள். அதன்படி சுனிலும் அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று மாந்திரீக பூஜைகளை தொடங்கினார்.

சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனிமையில் விஷேச பூஜை செய்தால் நோய் முழுமையாக குணமடைந்து விடும் என்று சுனில் தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி மாணவியின் பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து அந்த மாணவியை சுனில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 நாட்களாக பூஜை செய்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மாணவியை மயக்கி சுனில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பிறகு அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் இது பற்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறி அவரை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகும் அந்த மாணவி பாடசாலைக்கு செல்லும்போது சுனில் அவரை சந்தித்து பழகியும் இடைக்கிடையில் தொடர்ந்து அவருடன் உடலுறவில் உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுனில் அந்த மாணவியை சந்திக்காமல் இருந்துள்ளார். சுனிலை தேடி அவரது வீட்டிற்கு மாணவி சென்றபோது அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பூசாரி சுனிலை தேடி வந்தனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையில் சுனில் திருவனந்தபுரம் அருகே உள்ள வால்பாறை என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் அவருடன் கணவரை பிரிந்த ஒரு இளம் பெண்ணும் தங்கியிருந்தார்.

பொலிஸார் விசாரணையில் அந்த பெண் சுனிலின் கள்ளக்காதலி என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து சுனிலை பொலிஸார் கைது செய்தனர். பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் சுனில் போலி பூசாரி என்பதும் அவர் மாந்திரீக பூஜை செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி சீரழித்ததும் தெரிய வந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...