யாழில் பெண் ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தவனுக்கு தர்ம அடி!! எங்க தெரியுமா..!

Share this post:

kk

தந்தையுடன் பேரூந்தில் வந்து சாவகச்சேரியில் இறங்கிய மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மன்மதராசா அங்கிருந்தவர்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தென்மராட்சியை சேர்ந்த இந்த யுவதி யாழ் நகரத்தில் கல்வி பயின்று வருகிறார். அந்தப் பிரதேசத்தில் உள்ள வாலிபர் ஒருவர் கொஞ்ச நாளாகவே காதல் கடிதம் கொடுக்க முயன்று வருகிறார். இதுவரை அது பலனளிக்கவில்லை. எனினும், விடாக்கண்டனான வாலிபன் தொடர் முயற்சி செய்து வருகிறார்.

விடாக்கண்டனின் தொல்லையை தாங்க முடியாத மாணவி பெற்றோருக்கும் விடயத்தை சொல்லியுள்ளார். இதனால் தந்தை ஒரு திட்டம் தீட்டினார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும்போது யுவதியுடன் தந்தையும் வந்தார்.

பேரூந்தில் இருக்கும் போது அறிமுகமில்லாதவர்கள் போல வேறுவேறு ஆசனங்களில் உட்கார்ந்திருந்தனர். பேரூந்தில் வாலிபனும் ஏறியுள்ளான். சாவகச்சேரி பேரூந்து நிலையம் வந்ததும், பேரூந்து வாசலிற்கு வந்து காத்துள்ளான் வாலிபன். மாணவி இறங்க, பின்னால் தந்தையும் இறங்கியுள்ளார்.

வாசலில் வைத்து மாணவியிடம் கடிதத்தை வாலிபன் நீட்டியுள்ளான். இளைஞனை கடிதமும் கையுமாக எட்டிப்பிடித்த தந்தை, முறையான கவனிப்பு கொடுக்கத் தொடங்கினார். விடயமறிந்து கூடியவர்களும் இளைஞனை பிடித்து நையப்புடைத்துள்ளனர். இறுதியில் அடி தாங்க முடியாத வாலிபன் தலைதெறிக்க ஓடித்தப்பி விட்டான்.

Share This:
Loading...

Related Posts

Loading...