சந்திரனுக்கு உரிய நாளாகிய இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 10. 10. 2016

Share this post:

rasipalan

மேஷம்

சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

கடகம்

தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

கன்னி

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சொந்த&பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

துலாம்

எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

விருச்சிகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

மகரம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கும்பம்

எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

மீனம்

கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்«£கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

Share This:
Loading...

Related Posts

Loading...