ஒரு படத்தில் 4 லிப்லாக் காட்சிகள் அசத்திய சிம்பு..!

Share this post:

sss

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த அந்த படத்தில் கயல் ஆனந்தி, மனீஷா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படம் வெளியானபோது இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்ததால் பெண்கள் மத்தியில் அதிருப்தி நில வியது. என்றாலும், இளவட்ட ரசிகர்கள் அந்த படத்தை வெற்றிப்படமாக்கிக்கொடுத்தனர். அதனால் தனது அடுத்தபடியாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தையும் இளைஞர்களை நம்பி கதை பண்ணி படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ஆதிக்ரவிச்சந்திரன்.

அதோடு, இந்த படத்தில் சிம்பு முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிப்பதால் படத்திற்கான பரபரப்பு இன்னும் அதிகரித்துள்ளது. முதலில் மதுரை மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட பர்ஸ்ட் லுக், டீசரை வெளியிட்டவர்கள், இப்போது அஸ்வின் தாத்தாவாக சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கி வருகின்றனர். அதில், படையப்பா ரஜினி போன்ற கெட்டப்பில் சிம்பு நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், மதுரை மைக்கேல் கேரக்டரில் சிம்பு-ஸ்ரேயாவுக்கிடையே லிப்லாக் காட்சி இருப்பதும் நேற்று வெளியான டீசரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, இப்படத்தில் மொத்தம் 4 லிப்-லாக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்த டிரிபிள் ஏ படத்தில் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...