இப்படித்தான் இருக்கிறது தமிழ் சினிமா… எப்போது முன்னேறும்இந்த தமிழ் சினிமா..? இது நிஜம் தானே..?

Share this post:

rem

றெக்க, ரெமோ என இரண்டு திரைப்படங்கள் நேற்று ( தேவியும்தான் ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை) திரையரங்குகளில்.

மக்கள் முட்டாள்கள் என நம்ப வேண்டும் … அவரகளை மேலும் முட்டாளாக்கினால் வெற்றி என நம்ப வேண்டும்..

ஆயிரம் பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஒரே குறைந்த விலை பொழுதுபோக்கு, திரைப்படம் காண முதல் நாள் தயாராவது என்பது போன்ற ஒரு போதையை நாடும் மனப்பான்மை இருக்கும் வரை ரெமோக்களும் றெக்கைகளும் கொடி கட்டிப் பறக்கும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கதை திரைக்கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் வசனம் பொளீர் என இருக்க வேண்டும் அல்லது நெஞ்சு நக்கி வகையில் இருக்க வேண்டும்.

காதல் என வந்து விட்டால் கண்டதையும் பேசலாம் கண்டபடி திரியலாம் .. அதிலும் இந்த மாதிரி சினிமா படங்களில் காதலிக்கும் பெண் சர்வ முட்டாளாக இருக்க வேண்டும் .. பைத்தியமாக இருக்க வேண்டும் .. சுய உணர்வு சுய கவுரவம் இதெல்லாம் இல்லாத மானம் கெட்ட ஜென்மமாக இருக்க வேண்டும்.. கதை நாயகன் யாரோ அவன் வயது, தோற்றம் அறிவு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவனைக் கட்டிப் பிடித்து காதல் நடிப்பைக் கொட்ட வேண்டும்.

சண்டைக் காட்சி என வந்து விட்டால் முதலில் தயாராவது ஒளிப்பதிவாளர்தான் .. பிரத்தியேக ஒளி வடிவமைத்து கோணம் பொருத்தி ஒண்ணும் இல்லாத சோணங்கி நாயகனின் உடல் அமைப்பை பிரும்மாண்டமாக காண்பிக்க வேண்டும்.. அடுத்து ஸ்டண்ட் இயக்குனர் … அடேங்கப்பா இவரிடம் கயிறு உள்ளது என்பதால் தூக்க முடியாமல் கால் தூக்கி பவர் இல்லாத கையை தூக்கினால் உடனே ஆறு ஏழு ஸ்டண்ட் நடிகர்கள் பறப்பார்கள்.

அடுத்து வருவது இசை அமைப்பாளர்… இவரது பின்னணி இசையில் கதை நாயகன் காண்டா மிருகமாகி விடுவான் …. இசையாலேயே அடிக்கும் வித்தை தெரிந்த மகான் இவர்.

நடிகனுக்கு என்ன சூப்பர் சம்பளம், கவனிப்புகள் மற்றும் கதையில் ,வசனங்களில் மூக்கை நுழைத்து மாற்ற்ம் செய்யும் அதிகாரம்.

இப்படித்தான் இருக்கிறது தமிழ் சினிமா… முன்னேறுமா இனி நிஜமா?

Share This:
Loading...

Recent Posts

Loading...