தவறான வழிநடத்தலால் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இலங்கைச் சிறுமி..!

Share this post:

sin

சிங்கப்பூரில் 16 வயதான இலங்கைச் சிறுமி ஒருவர், அயல் வீட்டாரின் தவறான வழிநடத்தல் காரணமாக, விபச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி இவ்வாறு சிங்கப்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இலங்கையில் தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த இந்த சிறுமியின் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளது.

தனது பாட்டி வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கிய நிலையில் தந்தையும் ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பணம் உழைக்க முடியாது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், தனது அயல் வீட்டாரிடம் தனது நிலையை கூறியவேளை, அவர்கள் சிங்கப்பூருக்கு விலை மாதுவாக செல்லுமாறு அச் சிறுமியை தவறாக வழிநடத்தியுள்ளதாக, சிங்கப்பூரின் பிரதி அரச வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த வருடம் ஜூலை 24ம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

அங்கு அவரை வரவேற்ற இரு இலங்கையர்கள் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபட உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருவரில் ஒருவர் ஹத்தமுனே லியனகே புஸ்ப சுரங்க எனும் 29 வயதானவர் எனவும் மற்றையவர் சரிவர அடையாளம் காணப்படவில்லை எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Share This:
Loading...

Related Posts

Loading...